அக்னி-இரண்டு எவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் அக்னி-இரண்டு எவுகணை வியாழக் கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவிலிருந்து ஒருங்கிணைந்தசோதனை வரிசையின் (ஐடிஆர்) காம்ப்ளக்ஸ்-4 எனும்

லாஞ்சர் மூலம் வழக்கமானசோதனை முயற்சியாக காலை 8.48 மணிக்கு ஏவப்பட்ட இந்தஏவுகணை, தனது இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. தரையில் இருந்து 2,000 கி.மீ தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த எவுகணை 20 மீ நீளம் கொண்டது. 17 டன் எடைகொண்ட இது 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்துசெல்லும் திறன் வாய்ந்தது.

Tags:

Leave a Reply