டெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு  அனுமதி தர போவதில்லை ;  தமிழக அரசு டெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி தர போவதில்லை என தமிழக அரசுஅறிவித்துள்ளது . டெசோ மாநாட்டுக்கு தடைகோரும் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்பர், எத்தனை வாகனங்கள் வரும் என்று தகவல் தரப்படவில்லை. முழுதகவல் தராததால் சென்னையில் மாநாடை நடத்த அனுமதி தரப்படாது என அரசு தெரிவித்துள்ளது.

சென்னை_மைதானத்தில், 8 ஆயிரம்பேர் மட்டுமே அமர முடியும் எனவும் , சென்னையை தவிர, மாநிலத்தின் மற்றபகுதியில் மாநாடை நடத்த எந்த தடையுமில்லை என மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக.சார்பில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டை சென்னையில்நடத்த அனுமதி தருவது குறித்து காவல் துறையே முடிவு எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply