அசாம் கலவரத்துக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் கலவரம் அசாம் கலவரத்துக்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் இரண்டுபேர் உயிரிழந்தனர் 16 பேர் காயமடைந்தனர் .

அசாமில் நடந்த கலவரத்துக்கு கண்டனம்தெரிவித்தும், மியான்மரில்

இஸ்லாமியர் மீது நடத்தப்படும் தாக்கு தலைக் கண்டித்தும் ராஸா அகாதெமி மற்றும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மும்பையில் இருக்கும் ஆஸாத் மைதானத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது . இதில் இஸ்லாமிய மௌலான ஒருவர் ஊடகங்கள் அசாம் , மியான்மார் பிரச்சனையை சரியாக வெளியிடவில்லை என தாக்கி பேசியதாகவும் இதனை தொடர்ந்தே கலவரம் வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறையில் ஊடக நிறுவனங்கள் மற்றும் காவல் துறைக்குச்சொந்தமான வாகனங்களுக்கு வன்முறை கும்பல் தீவைத்தது. இதில் நியூஸ்24 என்ற ஹிந்தி செய்தி தொலை காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் 41 காவல்துறையினர் உள்பட 56 பேர் காயமடைந்தனர். அஸ்ஸாம் கலவரத்தை எதிர்ப்பவர்களிடமே அமைதி இல்லையே ,

Leave a Reply