அத்வானி தெரிவித்த கருத்து சரியே ; பால்தாக்கரே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்ட விரோதமானது என பா. ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்த கருத்துக்கு சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே ஆதரவு தந்துள்ளார் .

இது குறித்து தனது பத்திரிகையான “சாம்னா’வில்

தெரிவித்திருப்பதாவது : சில ஜனநாயகத்தில் வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளை மீறியதாக இருக்கலாம். எனவே, அவற்றை விழுங்கவேண்டி வந்தது. ஆனால் அதனாலேயே உண்மையும் வெளிப்படாமல், அமுங்கிவிடாது. அத்வானி வாய்தவறிப் பேசியிருக்கலாம். ஆனால், அவரது வாயிலிருந்து மத்திய அரசைப்பற்றிய கசப்பான உண்மை வெளிவந்துவிட்டது. அந்த கருத்தை பின்னர் அவர் திரும்ப பெற்றிருக்க வேண்டியதில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது அரசு சட்டவிரோதமானது தான். அது சிபிஐ. அமைப்பை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்

Leave a Reply