லோக்சபா , மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் லோக்சபா , மாநில சட்ட சபைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும்’ என்று , பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்யுள்ளார்.இது தொடர்பாக, அத்வானி தனது வலைப்பதிவில் தெரிவித்ததாவது :அடி க்கடி தேர்தல்கள் நடைபெறுவதால் , கொள்கைமுடிவு எடுக்கும் நடவடிக் கைகளில், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே லோக்சபா மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு, ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும்.

இந்த விவகாரம் குறித்து, கொஞ்ச நாட்களுக்கு முன், நான் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய லோக்சபா சபைத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் விவாதித்தேன். அவர்களும், இந்த யோசனையை வரவேற்றனர்.லோக்சபாவோ அல்லது மாநில சட்டசபைகளோ, குறிப்பிட்ட காலம் தொடர வேண்டும். இடையில் கலைக்கும் நடைமுறை இருக்கக் கூடாது. தேர்தல் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வர, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரே முறைதான் தேர்தல் நடக்கிறது. அதேபோல், ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட், குறிப்பிட்ட ஆண்டுகள் நீடிப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த ஆண்டு பிரிட்டனில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆறு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது, நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தேர்தலால் கூட, டில்லியில் கொள்கை முடிவு எடுக்கும் விவகாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதை நாங்கள் உணர்ந்தோம்.

நாட்டின் முதல் பொதுத் தேர்தல், 1952ம் ஆண்டில் நடந்தது. அப்போது, லோக்சபாவுக்கும், மாநில சட்டசபைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோல், 1957, 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளிலும், இதேபோல் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது.ஆனால், 1972ம் ஆண்டில், இதேபோல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியவில்லை. அதற்கு காரணம், பிரதமராக இருந்த இந்திரா காந்தி, முன்னதாகவே லோக்சபாவை கலைத்து விட்டு, 1971ம் ஆண்டு மார்ச் மாதமே, லோக்சபா தேர்தலை நடத்தி விட்டார்.

அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு, மாநில சட்டசபைகளை கலைப்பதற்கு, மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதுவும், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடக்காமல், குழம்பிப் போனதற்கு காரணம்.இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply