சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல்களாகட்டும் அல்லது இடைத்தேர்தல்களாகட்டும், இவை அனைத்தின் முடிவுகளும் மக்களிடம் காங்கிரஸுக்கான ஆதரவு குறைந்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன. ஆட்சியில் பிரதமரின் தலைமை ஊக்கமளிப்பதாக இல்லை.

யுபிஏ IIன் ஒரே மிகப்பெரிய தோல்வி பொருளாதார நிர்வாகம்; இதனோடு ஊழல்களும் சேர்ந்து ஆளும்கட்சியின் நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது. சிக்கலான சூழலில் இருக்கும்போது அதனுடைய தலைவர் குடும்பத்தினரை எதிர்பார்ப்பது காங்கிரஸின் பழக்கம். ஒரு குடும்பத்தை மையமாக வைத்து செயல்படும் கட்சிகள் ஒரு பெரும் குறைபாடை சந்திக்கின்றன. குடும்பத்தின் ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் சிறப்பாக செயல்பட இயலவில்லையென்றால் கட்சி குலைந்துவிடுகிறது. அடுத்த பொதுத் தேர்தல் விஷயத்தில் இவை அனைத்தும் காங்கிரஸுக்கு கவலை அளிக்கும்.

அதே நேரத்தில் மாநிலக் கட்சிகளின் உறுதி அதிகரித்துவருகிறது. இந்தியாவின் அடுத்த பாராளுமன்றத்தில் அவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பார்கள் என்பதை நிலவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வழக்கமான மூன்றாவது அணி என்பது இந்தமுறை கூட்டமைப்பு சார்ந்த முன்னணியாக ஆட்சி அமைக்கும் உரிமை கோருகிற அளவுக்கு வலுப்பெறும் என்ற ஊகம் சார்ந்த விவாதத்துக்கும் இது வழிவகுத்திருக்கிறது. இப்போது தேசியக் கட்சிகள் முக்கிய பங்காற்றுவதற்கு பதிலாக துணை செய்யும் அமைப்புகளாக இருக்குமா எனவும் கூட சிலர் வினா எழுப்பியிருக்கின்றனர்.

ஒரே கட்சி மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மை பெற்ற காலங்கள் முடிந்துவிட்டன. ஆட்சி அமைப்பதில் தேசியக் கட்சிகளின் பங்களிப்பு குறையப்போகிறது என்பதை இது எந்தவிதத்திலும் சுட்டிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளமுடியாது. முதல் நாற்பது ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மை பெரும் காங்கிரஸின் இயற்கையான திறன் 1990களில் முடிவுக்கு வந்துவிட்டது. 1996, 1998 மற்றும் 1999ல் பிஜேபி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது.

2004 ல் காங்கிரஸ் பிஜேபியைவிட வெறும் 4 தொகுதிகளே அதிகம் பெற்றிருந்தது. மாநிலங்களில் சிறந்த கூட்டணி மற்றும் அரசியல் நிலைத்தன்மை வேண்டும் என்ற பரவலான விருப்பத்தினால் இந்த முன்னிலை 2009ல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது. ஆனால் 2009 லிருந்து யுபிஏ திறனற்ற ஆட்சியை வழங்கிவருகிறது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸுக்கு மாற்று இடத்தை பெற்றுள்ள முக்கியமான அரசியல் கட்சி சமீபத்திய தேர்தல்களில் இயற்கையாக பலனடைந்துள்ளன. இந்தப் போக்கு மாறிவிடுவதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தெரியவில்லை. அடுத்த மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் குறைவாக இருக்கலாம்.

மூன்றாவது அணி என்ற முறை இதுவரை மூன்று முறை முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சரண் சிங், சந்திரசேகர், மற்றும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த ஹெச்.டி. தேவகௌடா மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோரைப் பிதமராக்க காங்கிரஸ் ஆதவளித்தது. இவர்களில் யாரும் ஒரு வருடம்கூட பதவியிலில்லை. காங்கிரஸ் தனக்கு சாதகமான நேரம் என்று நினைக்கக்கூடிய சமயத்தில் தேர்தல் நடத்துவதற்கு இவர்களை இடைக்கால ஏற்பாடாக பயன்படுத்திக்கொண்டது. எந்தப் பெயரில் இருந்தாலும் மூன்றாவது அணி என்ற யோசனையே தோல்விபெற்ற யோசனை ஆகும்.

மூன்றாவது அணியில் முக்கியமானவர்கள் இடதுசாரிகளும் சமாஜ்வாதி கட்சியும்தான். 2008 அணு ஒப்பந்தத்தின் மீதான விவாதத்தின்போது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் சமீபத்திய குடியரசுத் தேர்தல் ஆகிய இரண்டு சமயங்களிலும் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு அடிபணிந்துவிட்டது, ஏனென்றால் அதனுடைய தலைவர் ஊழல் வழக்குகளைச் சந்தித்துவருகிறார். ஊழல் செய்தவர்கள் பலவீனமானவர்கள், அவர்களை எளிதில் சமாளிக்க முடியும்; சமாஜ்வாதி கட்சி மற்றும் பிஎஸ்பி இரண்டையும் சமாளிப்பதில் காங்கிரஸ் இதைக் காண்பித்திருக்கிறது. நேர்மையானவர்கள் அதிக உறுதியுடன் வளைந்துகொடுக்காமல் இருக்கமுடியும். இதற்கு உதாரணமாக திரிணமூல் காங்கிரஸை எடுத்துக்கொள்ளலாம். சமாஜ்வாதி கட்சியின் பலவீனம் மூன்றாவது அணி என்ற யோசனைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இடது சாரிகள் இப்போது இக்கட்டில் இருக்கின்றனர். முப்பது ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு எந்த மாற்றுக் கட்சியும் இல்லாமல் இருந்தது. மேற்கு வங்கத்தில் அவர்கள் பெற்ற தொகுதிகள் மூலம் அவர்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது மிகச் சிறந்த மாற்று சக்தி ஒன்று உள்ளது. பாராளுமன்றத்தில் இடது சாரிகளுக்கான இடம் திரிணமுல் காங்கிரஸின் நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்கிறது. எனவே மூன்றாவது அணி ஏற்படுத்தும் சமாஜ்வாதி கட்சி மற்றும் இடது சாரிகளின் திறன் குறைந்திருக்கிறது.

பிஎஸ்பி அதனுடைய திட்டத்தை இன்னும் வெளியிடவில்லை. மிகவும் நுட்பமான மற்றும் ஐயத்துக்குரிய அடிப்படையில் அதனுடைய தலைவர் மாயாவதிக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிஎஸ்பி காங்கிரஸுக்கு முழுமையான நன்றியுணர்வுடன் இருக்குமா அல்லது அது காங்கிரஸின் பிடியிலிருந்து விலகிவிட்டதா என்பது அறியப்படவேண்டும். இந்தக் கேள்விக்கான விடை இன்னும் தெரியவில்லை.

பெரும்பாலான மாநிலக் கட்சிகள் கூட்டணியில் பங்குவகிக்கின்றன. அவர்கள் தேசிய அளவில் செயலாற்றும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். பல மாநில கட்சிகளுக்கிடையில் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால் மாநிலத்தில் காங்கிரஸுடன் அவர்களுக்கு அரசியல் போட்டி உள்ளது என்பதே ஆகும். அவர்களுக்கு காங்கிரஸை ஆதரிப்பது அல்லது சார்ந்திருப்பது என்பது எதிர்காலத்தில் அவர்களின் வாக்குவங்கியை சுருக்கிவிடும்.

மிகவும் உச்சத்தில் இருக்கும்போதுகூட குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான உறுப்பினர்களை அவர்கள் பெறலாம் ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டுமே முடியும், அவர்களில் யாரும் 30 உறுப்பினர்களுக்கு மேல் பெறுவார்கள் என நான் நம்பவில்லை. யார் ஆட்சிபுரிய வேண்டும் என அவர்கள் முடிவுசெய்ய முடியும். ஆனால் ஒரே தரப்பில் பக்கம் இருக்க முடியாத பல மாநிலக் கட்சிகள் உள்ளன. திமுக மற்றும் அதிமுக, தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிஎஸ்பி ஆகியவை பொதுவாக ஒரே கூட்டணியில் இருக்காது. மாநிலத் தொகுதியில் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அதிகபட்சம் சிலரால் முடியும். சமாஜ்வாதிக் கட்சியும் இடதுசாரிகளும் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்கள் எனத் தெளிவாகத் தெரியாத நிலையில், மாநிலக் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் வெளிப்படுகின்றன. ஏனென்றால் இவற்றில் எந்தக் கட்சியும் பல மாநிலங்களில் தொகுதிகளைப் பெறும் திறன் கொண்டது அல்ல. தேசியக் கட்சிகளை விலக்கிவிட்டு மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சி அமைப்பது என்ற யோசனையே குறைபாடுள்ளது.

காங்கிரஸின் சரிவைச் சுட்டிக்காட்டும் போக்குகள் மற்றும் சில மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புத் திறன் நீர்த்துப்போதல் ஆகியவை இதற்கு மாற்றாக என்டிஏ மட்டுமே இருக்க முடியும் என்ற தவிர்க்க இயலாத முடிவுக்கு வழிவகுக்கிறது. என்டிஏவில் உள்ள எங்களுக்கு 1996-98இல் அடல்ஜியின் கூட்டணி நிர்வாகம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம். 18 மாதங்களில் மூன்று கட்சி என்டிஏ 24 கட்சி கூட்டணியாக வளர்ச்சியடைந்தது. தோல்வியடைந்த யுபிஏவுக்கு மாற்றாக செயல்படுவதற்கு இன்று என்டிஏவுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த பங்கு இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் அல்லாத கட்சிகளைச் சேர்த்துக்கொள்வதற்கு என்டிஏ தன்னைத் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்தியா இன்று கூட்டணி அரசியல் காலத்தில் இருக்கிறது. கூட்டணியின் மையமாக ஒரு பெரிய கட்சி இருக்க வேண்டியது அவசியம்

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Tags:

Leave a Reply