டெசோ மாநாடு காலம் கடந்த முடிவு; வெங்கைய நாயுடு   திமுக, வின் டெசோ மாநாடு காலம் கடந்த முடிவு” என பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கைய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : போரினால்

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்று பாரதிய ஜனதா குரல் கொடுத்தது. இருப்பினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்த போதும் இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும் என இலங்கைக்கு ராஜீய ரீதியாக மத்தியஅரசு நெருக்கடி கொடுக்கவேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை.

ஆனால் இப்போது ஐநா. சபை மூலம் இலங்கை தமிழர் பிரச்னைகளுகு அரசியல் தீர்வு காணவேண்டும் என கூறுவது காலம் கடந்த நடவடிக்கையாகவே இருக்கிறது ” என்றார் வெங்கைய நாயுடு.

Tags:

Leave a Reply