சில நேரத்தில்  நீதிமன்ற தீர்ப்புகள் விலைகொடுத்து வாங்கபடுகின்றன;   மம்தா பானர்ஜி  சில நேரத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் விலைகொடுத்து வாங்கபடுகின்றன என மேற்கு வங்க மாநில முதலவர் மம்தா பானர்ஜி குற்றம்சுமத்தியுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது “இப்போதெல்லாம்

சிலநேரங்களில் பணத்துக்காக சாதகமான தீர்ப்புகள் வழங்க படுகின்றன; தீர்ப்புகள் விலைகொடுத்து வாங்கப் படுகின்றன.நீதித்துறையின் ஒரு பிரிவில் ஊழல் காணப்படுகிறது.

நான் இப்படி கருத்து தெரிவித்ததற்காக எனக்கு எதிராக நிச்சயமாக அவதூறு வழக்கு தொடரப்படலாம் என்பது எனக்குதெரியும்.ஆனால் இதைநான் சொல்லித்தான் தீர வேண்டும்.இவ்வாறு கூறியதற்காக சிறைக்குசெல்ல நான் தயாராக இருக்கிறேன் ” என மேற்கு வங்க சட்டசபையில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply