செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சியை தொடங்கும் என்று டெல்லியில் நடந்த 66வது சுதந்திரதின விழாவில் கொடியேற்றி வைத்து ஆற்றிய உரையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், உணவு தானியங்கள் வீணாவது நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது.உலக பொருளாதாரம் வறுமை நிலையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.பருவ மழை குறைவான காரணத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேம்பாடு அடையும்.அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.மின் உற்பத்தி பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாண்டுகளில் மின் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சி நடத்துவதற்காக இந்தியா சார்பில் விண்கலம் செலுத்தப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதாரத்தை பொறுத்தவரை இந்தியா போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் போன்ற சம்பவங்கள், வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:

Leave a Reply