அசாமில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு பிரதமர் உறுதியளிக்க வேண்டும் சுதந்திரதினத்தை முன்னிட்டு பாரதிய .ஜனதா தலைவர் அத்வானி தனதுஇல்லத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : அசாமில் நடந்த

கலவரத்தினால் லட்ச கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள் . அசாமிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர் எனும் முறையில், பிரதமர் மன்மோகன் சிங் இந்த விஷயத்தில் கூடுதல்கவனம் செலுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு மறு வாழ்வு தர தேவையான நடவடிக் கைகளை பிரதமர் எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். மறு வாழ்வு பணிக்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை அவர்களால் தங்கள் வீடுகளுக்கு திரும்பமுடியாத நிலை உள்ளது. எனவே பாதிக்க ப்பட்ட மக்களின் மறு வாழ்வுக்கு பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என்றார்

Tags:

Leave a Reply