நரேந்திர மோடி பிரதம மந்திரி வேட்பாளராவதை நான் எதிர்க்கவில்லை ;  நிதிஷ் குமார் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் தேசிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய

கூட்டாளிகளில் ஒருவரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நரேந்திர மோடி, பா.ஜ.க.வின் சார்பில் பிரதம மந்திரி வேட்பாளராக எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் பரப்பப்பட்டது .

இந்த செய்தியினை நிதிஷ்குமார் மறுத்துள்ளார். கூட்டணி உறவை முறித்துக்கொள்வதாக நான் ஒரு போதும் கூறியதில்லை. இது குறித்து ‘தி வீக்லி’ செய்திதாளில் வந்தசெய்தியை அவர்களே நீக்கி விட்டனர் என்றார் நிதிஷ் குமார்.

மேலும் தேசிய முற்போக்கு கூட்டணி உடனான உறவை முறித்து கொள்வதாக வந்த செய்தியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவும் மறுத்துள்ளார். இது குறித்து நான் யாரிடமும் பேசவில்லை. நிதிஷ் குமாரை எனக்கு நன்றாகதெரியும். அவர் இதை போன்று பேசமாட்டார் என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார் .

Leave a Reply