பா.ஜ.க வில்   பிரதமர் பதவிக்கு ஆறு  பேர் தகுதி உடையவேட்பாளர்கள்  நிதின் கட்காரி பாரதிய ஜனதாவில் பிரதமர் பதவிக்கு தகுதி உடைய வேட்பாளர்கள் ஆறு பேர் இருப்பதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது : 2014 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமவேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக_கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடுமில்லை. பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவுசெய்யும் முன்பாக பீகார் முதல்வருடன் கலந்து ஆலோசிக்கபடும் .

பா.ஜ.வின் 6 பிரதமர் வேட்பாளர்களில் மோடியும் ஒருவர். அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்டோர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. இது வரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply