சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவதுபோல், இந்து ஏழை, எளிய மாணவர்களுகும், கல்வி உதவித்தொகை வழங்க, சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக மூன்றாம் நாள் உண்ணா விரத நிறைவன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

சிறுபான்மை யின மாணவர்களுக்கு, ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி படிப்புவரை, மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்குவதை போன்று , இந்து ஏழை, எளிய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி, பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கடந்த 16ம் தேதி மறைமலை நகரில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர் .

பாரதிய ஜனதா அகில இந்திய செயலர் முரளிதர்ராவ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் பா,ஜ,க தொண்டர்கள் கலந்து கொண்டனர். புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவுதெரிவித்தன. மூன்றாம் நாளானநேற்று மாலை உண்ணா விரதம் நிறைவுபெற்றது. இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன், பழரசம்கொடுத்து, பொன்.ராதாகிருஷ்ணனின் உண்ணா விரதத்தை முடித்துவைத்தார்.

அப்போது பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: மத்திய ஆளும் காங்கிரஸ் அரசு, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்தாளுகிறது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக அவர்களுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இந்து க்களின் ஓட்டுகளை பணத்தின் மூலம்பெற்று விடலாம், என்று நினைத்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மறுக்கிறது. இதைகண்டித்து, பாரதிய ஜனதா கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறுபோராட்டங்களை நடத்தி வருகிறது. அதன்தொடர்ச்சியாக, உண்ணாவிரதபோராட்டம் நடத்தப்பட்டது.

எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றா விட்டால், எங்களின் அடுத்தகட்ட போராட்டமாக, வரும் டிசம்பர் , ஜனவரி மாதம் நாடுமுழுவதும் மாணவர்களை திரட்டி, மாபெரும் போராட்டத்தை_நடத்துவோம். இந்து ஏழை, எளிய மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, தமிழக முதல்வரை சந்திக்க இருக்கிறோம் . நாடுமுழுவதும் உள்ள அனைத்துகட்சி சட்டமன்ற, லோக்சபா உறுப்பினர்கள், அனைத்துகட்சி தலைவர்கள், பெற்றோர், மாணவர்கள்,விவசாயிகள், சமய துறவிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, ஆதரவுதிரட்ட உள்ளோம் என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply