பீதியை கிழப்பும் பாகிஸ்தானியர்களை கட்டுப்படுத்த வேண்டுமாம் வடகிழக்கு மாநில மக்களின் இன உணர்வுவைத் தூண்டி, நாடு முழுவதும் இருக்கும் வடகிழக்கு மாநில மக்களை பயமுறுத்த சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பாகிஸ்தானியர்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளதாம் .

இவை தொடர்பாக அந்த நாட்டு உள்துறை அமைச்சரை, இந்திய உள்துறையமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தொலை பேசியில் தொடர்பு கொண்டு கேட்டுகொண்டாராம் . இது ஒரு கேளிகூத்தே அனைத்து செயலும் பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்புடன்தான் நடக்கிறது என்பது அரசுக்கு தெரியாத . ஒரு சில நபர்களால் இவ்வளவு பெரிய பீதியை கிளப்பதான் முடியுமா. இன்றைய காலகட்டத்தில் நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அத்தகைய சமூக விரோதிகளை கட்டுப்படுத்திவிடலாமே . குண்டுபோட்டு அப்பாவி மக்களை கொள்ளும் சமுக விரோதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்காத பாகிஸ்தானா இந்த பீதியை கிளப்பும் ஆசாமிகளை கட்டுபடுத்த போகிறது. பாகிஷ்தான் உள்துறை அமைச்சர் என்ன செய்திருப்பார்? தொலைபேசியை வைத்துவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்திருப்பார்

Tags:

Leave a Reply