சுரங்க முறை கேட்டிற்கு பிரதமர்தான்  பொறுப்பேற்க வேண்டும்; பண்டாரு தத்தாத்ரேயா  நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுசெய்ததில் வெளிப்படை தன்மை இல்லாதது மற்றும் அறிவியல் முறைககளை ஏற்றுக் கொள்ளாதவை போன்ற காரணங்களால் ரூ.1.86 லட்சம்கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கணக்கு அலுவலகம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்தது.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; நிலக்கரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து போது நிகழ்த்தப்பட்டுள்ள சுரங்க முறை கேட்டிற்கு பிரதமர் மன் மோகன் சிங்தான் பொறுப்பேற்க வேண்டும். மத்திய கணக்கு தணிக்கை குழுவின் கணக்குப்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களை விட, நிலக்கரி சுரங்க ஊழலால் ஏற்பட்ட இழப்பு தான் அதிகம். இந்த அரசு நாட்டின் இயற்கை வளத்தை பாதுகாக்க தவறி விட்டது எனக் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply