வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மக்களின் பீதிக்கு காங்கிரஸ்சே காரணம் என பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்யநாயுடு குற்றம்சாட்டியுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; வடகிழக்கு மக்கள் பெரும்பீதியடைந்து கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களி லிருந்து தங்கள் சொந்தமாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர் . வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி பரப்பிவரும் வதந்தி இது. அஸ்ஸாம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களின் பாதுகாப்பில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது .

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனில் மௌனம் காக்கும் காங்கிரஸ். ஆர்எஸ்எஸ் அமைப்பு எனில் வீணாக குற்றம்சாட்டுகிறது. மத்திய அரசின் தகவல்தொழில் நுட்பத்துறை முடங்கிப் போய் உள்ளது. மக்களின் இந்த பீதிக்கு காங்கிரஸ் கட்சியே காரணம். இதை போன்ற வதந்தி களை பரப்பிவரும் அக் கட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் உரியபாடம் புகட்டுவார்கள் என்றார்.

Tags:

Leave a Reply