தேசிய நீதித்துறை ஆணையத்தை அமைக்கவேண்டும் ; யஷ்வந்த் சின்கா நீதித்துறையை சமாளிப்பதற்கு, மத்திய அரசு, புதிய வழி முறைகளை கையாளுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்க, தேசிய நீதித்துறை ஆணையத்தை அமைக்கவேண்டும், பலவந்தமாக தீர்ப்பு களை பெறுவதற்கான சூழ் நிலையை, அரசு உருவாக்குகிறது,”என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ;:நீதிபதிகளை நியமிப்பதற்க்கான தற்போதைய நடைமுறை, அரசுக்கு சாதகமாக இருக்கிறது . மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரை, ஒருவருக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு, அவரது நடத்தை, தங்களுக்கு_சாதகமாக இருக்கும் எனக்கருதினால் மட்டுமே அவரது நியமனத்தை, அரசு உறுதிசெய்கிறது.

நீதித்துறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள , இதை போன்ற புதிய வழிமுறையை அரசு கையாளுவதை, யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இருப்பினும் , அரசு இதை செய்கிறது.இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க , தேசிய நீதித்துறை ஆணையத்தை அமைக்கவேண்டும் என்று யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply