ட்விட்டருக்கு மத்திய அரசு  இறுதி எச்சரிகை வடகிழக்கு மாநில மக்களிடையே பீதியைக்கிளப்பும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட போலியான செய்திகளை வெளியிட்ட இணையதள பக்கங்களை உடனே அகற்றா விட்டால், அதற்கான தண்டனையை எதிர்கொள்ளவேண்டும் என்று ட்விட்டரை இந்திய அரசு எச்சரித்துள்ளது.

தென் மாநிலங்களான கர்நாடக, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பெரும் அளவில் வாழும் வட கிழக்கு மாநில மக்களின் மீது, முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துதை போன்ற போலியாக சித்தரிக்கப்பட்ட படங்களை வெளியிட்ட 310 இணைய தள பக்கங்களை தடைசெய்யும்படி ஏற்கனவே ட்விட்டருக்கு மத்திய அரசு ஆணையிட்டும் அது செவிசைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply