குற்றப் பத்திரிக்கையில்  கல்மாடி பெயர் குறிப்பிடப்படாதது அதிர்ச்சியை தருகிறது தனது கட்சியினரையும், ஆதரவாளர்களையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு சிபிஐ.,யை தவறாக பயன்படுத்தி வருவதாக பாரதிய ஜனதா குற்றம் குற்றம் சுமத்தியுள்ளது .

இது குறித்து பா,ஜ.க. மூத்த தலைவர் வெங்ககைய்ய நாயுடு

தெரிவித்ததாவது காமன்வெல்த் ஊழல் விவகாரம் குறித்த குற்றப் பத்திரிக்கையிலிருந்து காமன்வெல்த் விளையாட்டுகழக தலைவர் சுரேஷ் கல்மாடி பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது , குற்றப்பத்திரிக்கையில் எந்த ஒரு இடத்திலும் கல்மாடி பெயர் குறிப்பிடப்படாதது அதிர்ச்சியைதருகிறது .

காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் பெயர்கள் எந்தவித ஊழல் வழக்கிலும் சேர்க்கப்படா வண்ணம் மத்திய அரசு சிபிஐ.,யை தவறாக பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினர்

Tags:

Leave a Reply