சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை  அனுமதிக்க முடியாது; மம்தா பானர்ஜி சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட் டினை அனுமதிப்பதற்கு மேற்கு வங்கால முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; சில்லறை வர்த்தகம், ஓய்வூதிய நிதி, இன்சூரன்ஸ், விமான போக்குவரத்துத்துறை போன்றவற்றில் அன்னிய மூதலீட்டை அனுமதிக்கக்கூடாது. எப்போதும் நாங்கள் பொது மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளவற்றை நாங்கள் உறுதியாக_பின்பற்றுவோம்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள் என பலநாடுகள் தெரிவித்து வருகின்றன. எனவே நாங்கள் இந்த விஷயத்தில் அன்னிய முதலீட்டினை எதிர்க்கிறோம் என தெரிவித்தார்

Leave a Reply