மன்மோகன் சிங்  ராஜாவுக்கு சளைத்தவர் அல்ல  ;  அருண் ஜெட்லி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ராஜா மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்த நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடில் , பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்யமறுப்பது, பிரதமர் மன்மோகன் சிங் ராஜாவுக்கு சளைத்தவர் அல்ல என்பதையே காட்டுவதாக ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

இத்சு குறித்து அவர் தெரிவித்ததாவது , 2ஜி முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் ராஜா தனதுபதவியை ராஜினாமாசெய்தார். இதையே, இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறை கேடு விவகாரத்திலும் மேற்கொள்ளவேண்டும் என்பதையே பாஜக விரும்புகிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை யிலான அரசு., ஊழலில் திளைத்துவருகிறது. ஊழலில் மாட்டும் தங்கள் கட்சியினரை (உதாரணமாக காமன்வெல்த் முறைகேடு சுரேஷ் கல்மாடி….) சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்தி, ஊழல் புகார்களிலிருந்து தப்பவைத்து விடுகிறது என அவர் கூறினார்.

Leave a Reply