காங்கிரஸ்  ஊழலை   சட்ட பூர்வமாக்க முயற்சி; ராஜீவ் பிரதாப் ரூடி நிலக்கரி ஊழல் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறுவதன் மூலம் ஊழலை அது சட்ட பூர்வமாக்க முயற்சி செய்கிறது என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி குற்றம்சாட்டியுள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : பார்லிமென்டில் விவாதத்துக்கு பயந்து ஒளிவதாக கூறும் காங்கிரஸ்சின் குற்றச்சாட்டை நாங்கள் அறிவோம். ஆனால் இது முற்றிலும் திசைதிருப்ப நடக்கும் முயற்சியே . இந்த விஷயத்தில் விரிவான விவாதம்தேவை என்பதையும் நாங்கள் அறிவோம். இருப்பினும் காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலையில், விவாதத்தின் மூலமாக ஊழலை சட்ட பூர்வமாக்க முயற்சி செய்வதாக ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.

Leave a Reply