நிலக்கரி ஊழல்  ஆளும் மாநில அரசுகளின்  மீது பழிசுமத்துவது சரியல்ல நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டுக்கு, பாரதிய ஜனதா ஆளும் மாநில அரசுகளின் மீது, மத்திய அரசு பழிசுமத்துவது சரியல்ல. இதுதொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக இருக்கிறோம் என்று ‘ பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: நிலக்கரி சுரங் கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுசெய்ததில் நடந்த முறைகேடில் , மத்திய அரசுக்கு, 1.86 லட்ச கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது .

சுரங்க ஒதுக்கீடு நடந்த போது, அந்த துறையை கவனித்துவந்த, பிரதமர் மன்மோகன் சிங்தான், இதற்கு பொறுப்பேற்கவேண்டும். தன்பதவியை, அவர் ராஜினாமா செய்யவேண்டும். ஆனால், மத்திய அரசோ தங்கள் மீதான குற்றச் சாட்டை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக, பாரதிய ஜனதா ஆளும் மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. இது சரியான நடவடிக்கையல்ல. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில், இது தொடர்பாக, சிபிஐ., விசாரணைக்கு உத்தர விடப்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு சம்பந்தபட்ட பாரதிய ஜனதா அரசுகள், தயாராக உள்ளன எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார் .

Tags:

Leave a Reply