இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தலை நடத்தினால் எந்தக்கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து என்.டி.டிவி ஒருசர்வே நடத்தியுள்ளது.

மொத்தம் இருக்கும் 543 தொகுதிகளில் 18 பெரியமாநிலங்களில் 125

தொகுதிகளில் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. Ipsos எனும் தனியார் சர்வே அமைப்புடன் இணைந்து என்.டி.டிவி நடத்திய இந்தகருத்து கணிப்பில் 30,000பேர் வாக்களித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை நேற்றுமுதல் என்டிடிவி. ஒளிபரப்பி வருகிறது. என்.டி.டிவி அதிபரும் மூத்த பத்திரிக்கையாளருமான பிரணாய்ராய் இந்தகருத்து கணிப்பின் முடிவுகளை வழங்குகிறார். வரும் 31ம் தேதிவரை தினமும் இரவு 9 மணிக்கு இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

நேற்றிரவு மத்தியப் பிரதேசம், ஆந்திரா, சட்டீஸ்கர், ஒடிஸ்ஸா மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் விவரங்களை பிரணாய்ராய் வெளியிட்டார்.

இதில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த கருத்துகணிப்பில் 71 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மிகச்சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் . முதல்வர் சிவ்ராஜ் செளகான் மூன்றாவது முறையாக மீண்டும் ம.பி முதல்வராக வேண்டும் என 66 சதவீதம்பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 29 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 இடங்களை பாரதிய ஜனதாவும் , நான்கு இடங்களை காங்கிரசும் பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

.


Leave a Reply