ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான் ரெட்டி சகோதரர்கள் பாரதிய ஜனதாவுக்கு பெரும்தொகை தந்தார்கள் என லாலு பிரசாத்யாதவ் கூறியதற்கு, அவர்களுக்கு சுரங்க உரிமங்கள் அனைத்தையும் காங்கிரஸ்தான் அளித்தது என சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி தந்துள்ளார் .

இப்போது நாட்டையே கதி கலக்கி வரும் நிலக்கரி சுரங்க_விவகாரத்தில் காங்கிரஸ் ஆதாயம் பெற்றதாக ஏற்கெனவே சுஷ்மா கூறியிருந்தார். இதற்கு ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் . கர்நாடகத்தில்ரெட்டி சகோதரர்களிடம் பெரும் தொகை பெற்றது பாரதிய ஜனதாதான் என லாலு கூறினார்.

இந்தக் கருத்துக்கு பா.ஜ.க மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வ ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது. ரெட்டி சகோதரர்களிடம் இருந்து பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சி தான். ஒரு முதல்வரின் சிபாரிசின் பேரிலேயே காங்கிரஸ் அரசு ரெட்டி சகோதரர்களின் அனைத்து சுரங்கங் களுக்கும் உரிமம்வழங்கியது. ரெட்டி சகோதரர்களுக்கு உரிமம்வழங்கிய விவகாரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் வெளியிடவேண்டும். பணம்பெற்றது யார் என்று அப்போது எல்லாருக்கும் தெரியவரும் என்று சுஷ்மா தெரிவித்திருக்கிறார்

Leave a Reply