அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதிசெய்தது 2008ம் வருடம் மும்பை தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரை கொன்ற தீவிரவாதியான அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதிசெய்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வந்த 10 தீவிரவாதிகள்

அப்பாவி மக்களின் மீது நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லபட்டனர். இத்தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் உயிரோடுபிடிபட்ட அஜ்மல் கசாபின் மீதான வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அதனை விசாரித்த_மும்பை நீதி மன்றம், கசாப்புக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.கசாப் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மே ல்முறையீடு செய்யப் பட்டது. உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையையடுத்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதன் படி, கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும், மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தூக்குதண்டனையை உறுதி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply