இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று , பா, ஜ,க மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார் .

பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் மற்றும் வானவில்_பண்பாட்டு

மையம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் நினைவுநாள் விழா எட்டையபுரம் மகா கவி பாரதியார் மணி மண்டபத்தில் செப்டம்பர் 11-ம் தேதி நடை பெறுகிறது. இதனை முன்னிட்டு எட்டைய புரத்தில் செவ்வாய்க் கிழமை பாரதிய ஜனதா மூத்த தலைவரும், பொற்றாமரை கலை_இலக்கிய அமைப்பின் தலைவருமான இல.கணேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

செய்தியாளர்களிடம் இல.கணேசன் தெரிவித்ததாவது ; இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர் பாதிப்புக்கு மத்திய அரசும், திமுகவும் தான் காரணம். இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்கவேண்டும்; அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் சொந்தமண்ணில் வாழவேண்டும் என்பதே பாஜக,வின் நிலை. லட்சக் கணக்கான தமிழர்களை அழித்துவிட்டு நட்புநாடு என கூறிக் கொண்டு இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தருவது கண்டனத்துக் குரியது.

இதில் தமிழக முதல்வரின் நிலைபாட்டை வரவேற் கிறோம். இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தப்பகுதியிலும் பயிற்சி தரக் கூடாது என்றார்.

Leave a Reply