பாரதிய ஜனதா தேசிய செயற் குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது

சமீபகாலமாக கன்னியாகுமரி மாவட்டம் எங்கும் அமைதியான சூழ் நிலை இருப்பதை போன்று தோற்றமளித்தாலும் ஆங்காங்கு மதமாற்று

நடவடிக்கைகளும், இந்து மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது . சமீபத்தில் நடைபெற்ற ஒருகொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ்ஜின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள து.

அதைகண்டித்து நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில்_ஈடுபட்ட மாநில பா. ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உட்ப்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளார்கள். அவர்களை கைதுசெய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்குள் காவல்துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என தெரிவித்துள்ளார்

Leave a Reply