குஜராத்தில் நரேந்திர மோடிக்கே பெரும்வெற்றி கிடைக்கும் ; என்,டி,டிவி குஜராத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் நரேந்திர மோடிக்கே பெரும்வெற்றி கிடைக்கும் என என்,டி,டிவி கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது.

இப்சாஸ் எனும் நிறுவனம், என்.டி.டிவிக்காக நாடுமுழுவதும் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. அதில் குஜராத்தில் வரும் சட்ட சபை தேர்தலில் முதல்வர் மோடிக்கே மக்களிடையே பெரும்ஆதரவு நிலவுவதாகவும் . சட்ட சபைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அங்கு 120 சீட்டுகள் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது .

நரேந்திர மோடி ஒரு சிறந்த முதல்வர் என 82% பேர் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதேபோன்று குஜராத்தில் நல்லாட்சி நடந்து வருவதாகவும் 84% பேர் உறுதியாக கூறியுள்ளனர். இது பாஜகவுக்கு பெரிய நற் செய்தியாக அமைந்துள்ளது

கடந்த 2007 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 117 தொகுதிகளும் , காங்கிரசுக்கு 62 தொகுதிகளும் கிடைத்தன. இந்த தேர்தலிலோ பாரதிய ஜனதாவுக்கு 120 சீட்டுகள் வரை கிடைக்கும் என்றும் காங்கிரசுக்கு 59 இடங்களே கிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply