நிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய வேண்டும் “ஐக்கிய முற்போக்கு_கூட்டணி ஊழல்மிகுந்த அரசு என பெயர் பெற்றுள்ளது . இந்த அரசினால் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலக்கரி சுரங்க உரிமங் களை ரத்துசெய்ய வேண்டும்,” என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .

டில்லியில் பாரதிய ஜனதா இளைஞர் அணியின் சார்பில் நிலக்கரி சுரங்க ஊழலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி கலந்து கொடு பேசியதாவது ; நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடுசெய்ததில், மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்திருப்பதாக் , மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை தாக்கல்செய்துள்ளது.

இதற்கு முன்நடந்த ஊழல்களை எல்லாம், இந்த ஊழல் மிஞ்சி விட்டது. இந்த அரசு, ஊழல் மிகுந்த அரசு என பெயர் எடுத்துள்ளது. “2ஜி’ ஊழல் நடந்த போது, அதில், தனக்கு நேரடிதொடர்பில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங், மழுப்பலாக பதில் தந்தார் . தற்போது, அவரின் கட்டுப் பாட்டில் இருந்த நிலக்கரி துறையில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதற்கு பொறுப் பேற்று, தனது பதவியை அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று அருண் ஜெட்லி பேசினார்.

Leave a Reply