நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பிரதமர் பதவி விலகவேண்டும் எனும் பாரதிய ஜனதாவின் கோரிக்கையில் எந்தமாற்றமும் இல்லை என்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முறை கேடுகள் நிறைந்ததாக இருக்கிறது . ஒவ்வொரு முறை கேடும் மற்றதை மிஞ்சும் விதமாகவே உள்ளது .

நிலக்கரி சுரங்க முறை கேடுகள் தொடர்பாக பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற பாரதிய ஜனதா.வின் கோரிக்கையில் எந்தமாற்றமும் இல்லை. மேலும் பிரதமர் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் பாராளு மன்றத்தை சுமுகமாக நடத்த அனுமதிப்போம். நிலக்கரி ஒதுக்கீடு ஒப்பந்தத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக் கவில்லை. காங்கிரசுக்குத் தான் வருவாய் கிடைத்திருக்கிறது .இந்த சுரங்கஒதுக்கீடுகள் நாட்டின் மின்உற்பத்திக்கு எப்படி உதவும் என்பதற்கு பிரதமர் பதில் தரவேண்டும்.

இதுதொடர்பாக தற்போது நடந்து வரும் சி.பி.ஐ விசாரணை சுதந்திரமாக நடை பெறாததால், அந்தவிசாரணை வேண்டாம். சுரங்க முறைகேடுக்கு பிரதமர் நேரடியாக பொறுப் பேற்று பதவி விலகவேண்டும். மேலும் அனைத்து சுரங்க ஒப்பந்தங்களும் ரத்துசெய்யப்பட்டு, சுதந்திரமான விசாரணை நடைபெறவேண்டும் என்றார்

Tags:

Leave a Reply