தென் இந்தியாவில்  புதிய பெயருடன்  தீவிரவாத இயக்கம் தென்இந்தியாவில் உள்ள மதத்தலைவர்கள், எம்பி. எம்.எல்.ஏ.க்களை படு கொலை செய்து கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் இருந்த 12 பேர் பெங்களூரில் கடந்த வாரம் கைதானார்கள். அவர்கள் தந்த தகவலின்பேரில் ஐதராபாத்தில் ஒருவர் கைதானார்.

பிடிபட்ட 13 பேரை யும் பெங்களூர் தனிப்படை பிரிவு காவல்துறை ரகசிய இடத்தில்வைத்து விசாரித்து வருகிறது . தென் இந்தியாவில் உள்ள உள்ள ராணுவ நிலைகள், அணுமின் நிலையங்கள் மத தலைவர்கள், எமபி.க்கள், எம்.எல்.ஏ.க்களை படுகொலைசெய்து கலவரத்தை ஏற்படுத்துவது இவர்கள் திட்டமாக இருந்தது தெரிய வந்தது.

இவர்கள் ஒரு நபர் மூலம் தான் பெங்களூரில் இருக்கும் தீவிரவாதிகள் ஒருங்கிணைக்கப் பட்டிருந்தனர் என தெரியவருகிறது , தென் இந்தியாவில் புதியபெயருடன் இயங்கும் இந்ததீவிரவாதிகள் அனைவருக்கும் ஜாகீர் என்பவன் தலைவனாக செயல் பட்டது தெரியவருகிறது .

ஜாகீரின் வீட்டில் வைத்துதான் பலசதி திட்டங்கள் தீட்டப்பட்டதாக தெரியவருகிறது . தலைவர்களை படுகொலைசெய்ய ஜாகீரும், அக்ரம் என்ற தீவிரவாதியும்சேர்ந்து பயிற்சி கொடுத்து உள்ளனர் . பயிற்சிபெறும் தீவிரவாதிகளுக்கு சவுதிஅரேபிய லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளிடமிருந்து லட்சக்கணக்கில் பணம்பெற்று ஜாகீர் செலவு செய்துள்ளான்.

மேலும் ஜாகீர் அடிக்கடி சவுதிஅரேபியா சென்று வந்திருப்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இவன் பிடிபட்டால்தான் தென்இந்திய தீவிரவாதிகளின் முழுதிட்டமும் தெரியவரும்.

Tags:

Leave a Reply