மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம்  கண்டனம் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனனே கூட்டவேண்டும் , காவிரியில் தமிழகத்துக்கு உரியநீரைப் பெற்றுத்தர உத்தரவிட வேண்டும் என கோரியும் தமிழக அரசு தாக்கல்செய்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

கர்நாடக அரசின் பதில்மனு மீது தமிழக அரசு தாக்கல்செய்த இணை மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், உடனடியாக காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டவேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இது வரை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்டு வதற்கான தேதியை மத்திய_அரசு அறிவிக்காமல் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியதாகும் என கூறினர்.

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட மத்திய அரசு தேதிகுறிக்கா விட்டால் உச்ச நீதிமன்றமே தேதியை அறிவிக்கவேண்டியது வரும் என நீதிபதிகள் தெரிவித்தனர் .காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட மாநில அரசுகளின் ஒப்புதல்தேவையா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.

Tags:

Leave a Reply