காங்கிரஸ்  அரசு  இந்தியாவின் முகத்தில் கரியை பூசி விட்டது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு, இந்தியா வின் முகத்தில் கரியை பூசி விட்டது என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார் .

சர்வதேச தரத்திலான விவசாய ஆராய்ச்சி மற்றும் உயர்நுட்ப பயிற்சி மையம் குஜராத்தில் அமைக்கப்பட இருக்கிறது . இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தின் மூலம் அமைக்கபட்டுள்ள இந்தபயிற்சி மையத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது ; குஜராத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு மண்ணின் தன்மை குறித்த விவரம் அடங்கிய அட்டைகளை_வழங்க மத்திய அரசு முடிவுசெய்தது. ஆனால் அதை எப்போது வழங்கபோகிறார்கள் என்பது தெரிய வில்லை. மத்தியஅரசு தற்போது நிலக்கிரி ஒதுக்கீடு மோசடியில் சிக்கியுள்ளது.

இந்தமோசடியின் மூலம் காங்கிரசின் தலைமையிலான மத்திய_அரசு, நாட்டின் முகத்தில் கரியை பூசி விட்டது. இது வரை நிகழ்ந்த ஊழல் களிலேயே இது தான் மிகப்பெரியது. இந்தியாவிலேயே தொழில் மற்றும் வேளாண் துறைகளில் வளர்ச்சியை எட்டிய ஒரேமாநிலம் குஜராத்தான்.

விவசாயத் துறையில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 2 முதல் 3 சதவீதம்தான் உள்ளது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் குஜராத் விவசாய துறையில் 10 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் குஜராத்தில் இருக்கும் 7 லட்ச ஹெக்டேர் விவசாய நிலங்கள், நுண்ணியபாசன வசதியை பெற்றிருக்கிறது . ஆனால் அதற்குமுந்தைய 40 ஆண்டுகளில் 10 ஆயிரம்_ஹெக்டேர் விவசாயநிலம் மட்டுமே, நுண்ணிய பாசன வசதியைபெற்றது.

இனி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குஜராத்தில் சர்வதேச அள விலான விவசாய கண் காட்சி நடை பெறும். இதில் நவீன விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் முறைகள் பார்வைக்கு வைக்கப்படும். இஸ்ரேலின் உதவியுடன் குஜராத்தில் ஒருவிவசாய கல்லூரி அமைக்கபடும். இதில் பயிலும் மாணவர்களுக்கு, இஸ்ரேல் பல்கலைகழகம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப் படும் என்றார்.

Leave a Reply