சிங்களர்கள் சென்றபேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்  சிலர் காயம் வேளாங் கண்ணியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களர்கள் சென்றபேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தபட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

வேளாங்கண்ணி மாதாவை தரிசிக்க வந்த இலங்கையைச்சேர்ந்த

சிங்களர்கள் 184 பேர்களுக்கு எதிராக ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து, அவர்களை சுமார் 5 பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி கொண்டு வர திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திருவாரூர் அருகே சிங்களர்கள் வந்த பேருந்து மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்டது.

அதைத் தாண்டி பேருந்து இன்று மதியம் திருச்சி – தஞ்சாவூர் சாலையில் திருவெறும்பூர் அருகே,அப்பேருந்து வந்தபோது அதன்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டன.

இதனால், சிங்களர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.பிறகு நிலைமை சற்று சீரடைந்ததும் பலத்த பாதுகாப்புடன் அவர்களை போலீசார் திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி,அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.

பூண்டி மாதா கோவிலில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே சிங்கள பக்தர்கள் வந்த வாகன்ங்கள் மீது நடைபெற்ற் கல்வீச்சு தாக்குதலில் சிலருக்கு இலேசான காயம் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் 31 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:

Leave a Reply