பிரதமரின்  மவுனம் நாட்டுக்கு ‌பெரிய ஆபத்து வாஷிங்டன் போஸ்ட் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து மவுனம்காத்து வருவது நாட்டுக்கு ‌பெரிய ஆபத்து, அவருக்கு பல திறமைகள் இருந்தும் அவர் ஊனமுற்றவர் போன்று செயல்படுவதாகவும், அவரது தலைமை யிலான அரசு ஊழலில் ஊரியிருப்பதகவும் அமெரிக்க பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் விமர்சித்துள்ளது .

மேலும் அது தெரிவிப்பதாவது ; பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கி இருக்கின்றன. குறைவான வளர்ச்சியின் காரணமாக ரூபாயின் மதிப்பும் சரிந்து ள்ளது. அவரது சகாக்கள் ஊழல்செய்து தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதை பார்த்தும் அவர் மவுனமாக இருப்பதகவும் வாஷிங்டன் போஸ்ட் விமர்சித்துள்ளது,

பிரதமரை விமர்சித்து செய்திவெளியிட்ட பத்திரிகை மன்னிப்பு கேட்கவேண்டும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது . ஆனால் மன்னிப்புகேட்க முடியாது என வாஷிங்டன் போஸ்ட் மறுத்துவிட்டது.

Leave a Reply