இடஒதுக்கீடு  மசோதாவை வேக வேகமாக திணிக்கும் முயற்சி  அரசியலமைப்புக்கு எதிரானது  அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேக வேகமாக திணிக்க முயல்கிறது , அவ்வாறான திணிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என பா.ஜ.க மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ‘காங்கிரஸ் கட்சி யாருடனும் விவாதிக்காமல், திடீரென இந்த மசோதாவை கொண்டு வர முயற்சிக்கிறது . எனவே தான் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் கட்சி எம்.பிக்ளிடை டையே கைகலப்பு ஏற்பட்டது இது போன்ற சூழலில் இத்தகைய கை கலப்பு பிரச்சினைகள் எதிர் பார்க்கப்பட்ட ஒன்று தான்’ என தெரிவித்தார்

அப்போது, பிரதமர் மன்மோகன்சிங்கை பலவீனமானவர் எனவும், ஊழல் அரசை வழி நடத்துபவர் எனவும் விமர்சித்துள்ள “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகை, பிரதமரிடம் மன்னிப்புகேட்க வேண்டும்ம் என்று மத்திய அமைச்சர் அம்பிகாசோனி கூறியிருப்பது பற்றி ஜஸ்வந்த்சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் தந்த அவர், ‘இத்தகைய விமர்சனங்களுக்கு பிறகும் நாட்டை ஆண்டு வரும் பிரதமர் தான் இந் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமெரிக்க பத்திரிகை மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை’ என தெரிவித்தார்

Tags:

Leave a Reply