ஜாதி , மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எப்போதும் எதிர்ப்போம்; சிவசேனா அரசு வேலைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழக்கும் மசோதாவுக்கு சிவசேனா கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது . ஜாதி , மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எப்போதும் எதிர்ப்போம் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இதுபற்றிஅந்த கட்சி மேலும் தெரிவித்ததாவது , ‘நீண்ட காலமாக நாங்கள் ஜாதி , மத அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளை எதிர்த்து வருகிறோம். இது ஓட்டுவங்கி அரசியலுக்காக அல்ல. சமூகநீதிக்காகவே இந்த நிலையைக் கொண்டுள்ளோம். மதம் ,ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்ககூடாது என்பதே சிவசேனாவின் நிலை.

தற்போதைய மத்திய அரசின் இடஒதுக்கீடு சமூக நீதிக்கும், தகுதியானவர்களுக்கும் எதிரானது. இது அராஜகத்திற்கே வழிவகுக்கும். எனவே இதனை நாங்கள் எப்போதும் எதிர்ப் போம் ‘ என்றார்.

Tags:

Leave a Reply