நிலக்கரி சுரங்க விவகாரத்தில்  சிக்கும் திமுக  அமைச்சர் நாட்டையே உலுக்கிவரும நிலக்கரி சுரங்க விவகாரத்தில் திமுக.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் கம்பெனியும் ஆதாயம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம்வகிக்கும் திமுக.,வுக்கும்

தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தகட்சியை சேர்ந்த ஜெகத்ரட்சகன் மத்திய தகவல் ஒளிபரப்பு துணை இணை அமைச்சராக இருக்கிறார் . இவர் ஜேஆர்.பவர் ஜென்பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை நடத்திவந்துள்ளார். . இந்தகம்பெனிக்கு புதுச்சேரி இன்டஸ்ட்ரியல் பிரமோஷன் டெவலப் மென்ட் என்ற அரசுசார்ந்த நிறுவனத்தின் மூலம் நிலக்கரி சுரங்கத்தில் அனுமதிபெற்றுள்ளார். இதில் நல்ல லாபம் அடைந்திருப்பதாக தெரியவருகிறது

இந்நிலையில் இந்த விவகாரத்தை பார்லி.,யில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது .

Leave a Reply