நிலக்கரி ஊழலை திசை திருப்பவே ,எஸ்டி., எஸ்.சி.பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டினை மத்திய அரசு கையில்எடுத்துள்ளது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி குற்றம்சுமத்தியுள்ளார் .
இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது , எஸ்டி., எஸ்.சி. பிரிவினருக்கு பதவிஉயர்வில் இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக கடந்த 1995ம் ஆண்டிலிருந்து பாராளுமன்றத்தில் கிடப்பில்போடப்பட்டுள்ளது.
இந்தமசோதாவை தற்போது தூசிதட்டி கொண்டு வருவதில் காங்கிரஸ் கட்சியின் ஆர்வம் ஒரு ஏமாற்று வேலை நிலக்கரி ஊழல் விவகாரத்தை திசைதிருப்பவே இடஒதுக்கீட்டினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது . இடஒதுக்கீட்டில் மற்ற கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டவில்லை. எனவே மசோதா நிறைவேறாமல் தோல்வி அடைந்துள்ளது என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார் .