பாரதியின் பக்தர்களுககு எட்டைய புரம்தான் புண்ணிய பூமி; இல.கணேசன்  பாரதியின் கருத்துக்களை பரப்புவோம், பாரதியின் பக்தர்களுககு எட்டைய புரம்தான் புண்ணிய பூமி என்று பொற்றா மரை கலை இலக்கிய அரங்கின் தலைவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் எட்டையபுர மகாகவி பாரதியின் நினைவு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை விழா நடை பெற்றது. இந்த விழாவில் இல.கணேசன் பேசியதாவது: பாரதி ஒரு கடவுளாக போற்றப் படுகிறவர். அவரது பக்தர்களுக்கு எட்டைய புரம்தான் புண்ணிய பூமி. அவர் ஒரு புரட்சி வாதி, தேசத்துக்காக பாடுபட்டவர். சிந்தித்து வாழ்ந்தவர். வசதிபடைத்தவர்கள் பிறருக்கு உதவுவது பெரியகாரியம் இல்லை. ஏழ்மை நிலையில் இருக்கும் மனிதன் பிறருக்கு உதவுவது தான் பெருமை. அந்த வகையில் பொருள்களை வாரி வழங்கிடும் மன ப்பான்மை பாரதியிடம் இருந்தது. இந்தப்பண்பினால் அவர், கர்ணனையும் விஞ்சியவர். பாரதி பாடல்களையும் எழுத்துகளையும் படிப்போம். அவரின் கருத்துகளைத் தேசமெங்கும் பரப்பி அமலாக்க நாம் அனைவரும் ஒன்று கூடுவோம் என்றார் இல.கணேசன்.

Tags:

Leave a Reply