நிலக்கரி ஊழல்   பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும் பாஜக மூத்த தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து அவர் நிலக்கரி ஊழல் தொடர்பான பிரச்சினையில் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர் .

இது குறித்து அத்வானி அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது , நிலக்கரி சுரங்க ஒதுக்கீடில் ஏற்ப்பட்ட இழப்பு குறித்து அறிக்கைதந்த மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியை காங்கிரஸார் விமர்சனம்செய்து வருகிறார்கள். இது அரசியல்_சட்டத்துக்கு எதிரானது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் ஜனாதிபதியும் தலையிடவேண்டும் என கேட்டுள்ளோம் என்றார்.

Leave a Reply