நிலக்கரி ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன்சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என கோரி செப்டம்பர் 17 ந தேதியிலிருந்து 24-ம் தேதி வரை நாடுதழுவிய போராட்டதை நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து பா.ஜ.கவின் பொதுச்செயலர் அனந்த் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பிரதமரின் ராஜி நாமா, அனைத்து நிலக்கரி_சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்தல், உச்சநீதிமன்ற கண் காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டத்தை பாரதிய ஜனதா நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக “ராஜ்பவனை நோக்கி’ என்ற பேரணிபோராட்டமும் நடைபெறும். அந்தந்த மாநிலத் தலைநரங்களில் இருக்கும் ஆளுநர் மாளிகையை நோக்கி மாநில பாரதிய ஜனதா தலைவர்களின் கீழ் கட்சித்தொண்டர்கள் பேரணி நடத்துவார்கள் என்று அனந்த் குமார் தெரிவித்தார்.

Leave a Reply