காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ் என அழைக்கலாம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடில் காங்கிரஸ் கட்சி நாட்டின்முகத்தில் கரியைப் பூசிவிட்டது. எனவே இனி , “அகில இந்திய_காங்கிரஸ் கமிட்டியை, “அகில இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைக்கலாம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; வகுப்பு வாதத்தை பரப்புவது, வேண்டப் பட்டவர்களுக்காக செயல் படுவது மற்றும் வாக் குறுதிகளை நிறை வேற்றத் தவறுவது போன்றவைதான் காங்கிரஸின் கொள்கைகளாக இருக்கின்றான் .

காங்கிரசின் தலைமையிடம் ஆலோசித்த பிறகே பிரதமர் எந்தஒரு முடிவையும் எடுக்ககிறார் . ஆக மொத்தத்தில் மன்னர் ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் குஜராத்தில் அதை போன்ற நிலையை அனுமதிக்க முடியாது. நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் நாட்டின் முகத்தில் கரியைப் பூசிவிட்டது. இதனால், “அகில_இந்திய காங்கிரஸ் கமிட்டியை இனி, “அகில_இந்திய நிலக்கரி காங்கிரஸ்’ என அழைககலாம். இதுவரைக்கும் தங்கம், வைரம், வெள்ளி போன்றவை திருடப்பட்டதை கேள்விபட்டிருப்போம் . ஆனால் முன் எப்போதும் இல்லாதவகையில் இப்போது ரூ.2 லட்சம்கோடி மதிப்பிலான நிலக்கரியை திருடிவிட்டதாக கேள்விப்படுகிறோம் என்றார்.

Leave a Reply