நிலக்கரி ஒதுக்கீடு மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் ; உச்ச நீதிமன்றம்  நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக எந்தமுறையைப் பின்பற்றி ஒதுக்கீடு செய்யபட்டது மற்றும் எந்த விதமான வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றபபட்டுள்ளன என்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது ; அதில்,”184 நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செயய்ப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியானசி.ஏ.ஜி.யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவற்றுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறது.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,மத்திய அரசை கடுமையாக குறைகூறினர். மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்டவர்.அதை நம்புவதில் என்ன தவறு இருக்கிறது? இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இதில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த ஒதுக்கீடு மூலம் சில அரசியல்வாதிகளின் உறவினர்கள் ஆதாயம் பெற்றார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர்.

அத்துடன் இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை 194 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு,இந்த ஒதுக்கீடு தொடர்பாக எந்த முறையைப் பின்பற்றி ஒதுக்கீடு செய்யப்பட்டது மற்றும் எந்தவிதமான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பது குறித்து 8 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:

Leave a Reply