முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு.கே.எஸ்.சுதர்ஷன் அவர்கள் மறைவு குறித்து அதிர்ச்சியும் துயரமும் தெரிவித்துள்ள பாஜக தலைவர் நிதின் கட்கரி, அவரை சிறந்த சிந்தனாவதி மற்றும் தொலைநோக்காளர் என்று போற்றியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் முன்னாள் ஸர்ஸங்கசலக் உயர்திரு சுதர்ஷன் ஜி அவர்களின் மறைவுக்கு தன்னுடைய ஆற்றொணா துயரத்தையும் ஆழ்ந்த வருத்தத்தையும் பாஜக தலைவர் திரு நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய இரங்கல் செய்தியில், உயர்திரு சுதர்ஷன் சிறந்த சிந்தனாவாதி மற்றும் தீவிர தேசபக்தி மிக்கவர் என்றும், தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தேச சேவைக்காக அர்ப்பணித்தவர் என்றும் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தேசமெங்கும் பல பகுதிகளில் விரிவு படுத்தியதில் ஒரு பிரச்சாரகராக குறிப்பிடும்படியாக பங்காற்றிய உயர்திரு சுதர்ஷன் ஜி, 2000 முதல் 2009 வரை சங்கத்தின் ஸர்ஸங்கசலக்காகவும் சிறப்பான பணிபுரிந்துள்ளார் என்றும் திரு.நிதின் கட்கரி தன் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுதேசி இயக்கம், இயற்கை எரிபொருள் மற்றும் மாற்று எரிசக்திக்கான ஆதாரங்கள் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளரான உயர்திரு சுதர்ஷன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஏழை மக்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்கும் தேவையான தொலைநோக்குப் பார்வையும் கொண்டிருந்தார் என்று கூறியுள்ள நிதின் கட்கரி, உயர்திரு சுதர்ஷன் அவர்களின் மறைவு ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் உயர்மட்ட வரிசையில் நிரப்ப இயலாத ஒரு வெற்றிடத்தை உண்டாக்கியுள்ளது; அவருடைய மரணம் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிப்பதாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply