ரெளடிகளின்  ராஜ்யமாகும் உ.பி உ.பி.,யில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் சிங் பதவியேற்ற ஆறுமாதத்திலேயே 2 ஆயிரத்து 400 க்கும் அதிகமான கொலை சம்பவங்கள் , 1100 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 450 வழிபபறி கொள்ளைகள் நடந்துள்ளதாக ஒருரிப்போர்ட்டில் தெரியவருகிறது .

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டம் -ஒழுங்கு சீற்குலைந்திருப்பதையே இது காட்டுகிறது குண்டர்களின் ராஜ்யம் தலை தூக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வராக அகிலேஷ்சின் ஆறு மாத ஆட்சியில் இது வரை 2,437 கொலைகள், 1100 பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள், 450 கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது . மேலும் ரேபரேலி, கோஸிகலான் போன்ற முக்கிய நகரங்களில் நடந்த வன்முறைகளில் , சட்ட ஒழுங்கு சீர்கெட்டு , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அகிலேஷ்சின் அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் ‌கடும் குற்றப் பின்னணி உடையவர்களாக உள்ளனர் .தேர்தல் முடிவுவெளியான அடுத்த நாளளே , வெற்றிபெற்ற ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ.தனது வெற்றியைகொண்டாட துப்பாக்கியால் வானத்தைநோக்கி மூன்று முறை சுட்டுள்ளார் . இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் . ஒருவரும் பலியானார். அப்போ‌தே ரெளடிகளின் ராஜ்யத்தை தொடங்கிவிட்டனர்

Leave a Reply