டீசல் விலையை உயர்த்துவதும், ஒருவகையில் பயங்கரவாதமே   ஐ.மு., கூட்டணியில் இருக்கும் கட்சிகள், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதைவிட மத்திய அரசிலிருந்து வெளியேறுவதே சிறந்தது, டீசல் விலையை உயர்த்துவதும், ஒருவகையில், பயங்கரவாத செயல் போன்றதுதான்’ என்று சிவசேனா தலைவர் பால்தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது;கசாப், 200 பேரைச் சுட்டுக்கொன்றான். தற்போது டீசல் விலை உயர்வின் மூலமாக 30 கோடி ஏழைமக்களின் வாழ்க்கையை, மன்மோகன்சிங்கும், சோனியாவும் சீர்குலை துள்ளனர்.. ஐமு., கூட்டணியில் இருக்கும் திமுக., திரிணமுல் காங்கிரஸ், போன்ற கட்சிகள், டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை காட்டிலும், மத்திய அரசிலிருந்து வெளியேறுவதே, அந்தகட்சிகளுக்கு நல்லது.என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply