கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்கா பண உதவி; ஆர்கனைசர் கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்கா பண உதவிசெய்து போராட்டத்தை தூண்டிவிடுவதாக ஆர்.எஸ்.எஸ். சின் ஆதரவு பத்திரிக்கையான ஆர்கனைசர் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மேலும் அது தெரிவிப்பதாவது ஜெய்தாபூரில் பிரான்ஸ் ஆதரவுடனும் , கூடங்குளத்தில் ரஷ்யா ஆதரவுடனும் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களை மூட அமெரிக்கா ஒருபிரிவினரைத் தூண்டி போராடவைத்துள்ளது.

அமெரிக்கா கோடி கணக்கான பணத்தை உள்ளூர் பிஷப்களினால் நடத்தப்படும் என்ஜிஓ.க்களுக்கு அளித்து கூடங் குளத்தில் போராட்டத்தை தூண்டிவிடுகிறது. அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துள்ள போதிலும் அதனுடன்சேர்ந்து இன்னும் அணுமின் நிலையம் அமைக்கவில்லை. இந்தநிலையில் ஜெய்தாபூர் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்களை மூடிவிட்டால் அதற்கு மாற்றுவழியை தான் காண்பிக்கலாம் என அமெரிக்கா நினைக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply