இறைவன் இருக்கும் இடம்  ஒரு ஆன்மிக பெரியவர் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்தபோது , ஒரு நாள் அந்தப் பெரியவர் அந்த தெரு வழியே நடந்து சென்று  கொண்டிருந்தார். ஏராளமான  அடியவர்கள்  எதிரே வந்து பெரியவரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிகொண்டிருந்தர்கள் .

பெரியவர் குழந்தைகளை பார்க்கிறார் , எல்லோரும் ஏழைக் குழந்தைகள், சட்டையெல்லாம் கிழிசல்கள் , ஆளுக்கு , இன்னும் சில குழந்தைகள் சட்டையே அணிந்திருக்க வில்லை . பரிதாபமான சூழ்நிலை , பார்த்தார் பெரியவவர் , மேற்கொண்டு நடக்காமல்  அங்கேயே  நின்றுவிட்டார் . 

இதை கண்ட அவரது உதவியாளருக்கு ஒரே கவலை  . அடுத்த ஊருக்கு சரியான நேரத்தில்   போய் சேரவேண்டுமே   என்ற  கவலை. மெல்ல ஓடிப்போயி பெரியவரிடம் பணிவாக அதை நினைவூட எத்தனித்தார் . அதற்கு முன் பெரியவரே இவரோடு காதோடு காதாக ஏதோ சொல்லி அனுப்பினர் . உதவியாளர் உடனே அங்கிருந்து வேகமாக ஓடினர்.

அவர் போன பிறகு பெரியவரே அந்த குழந்தைகளை அருகில் அன்புடன் அழைத்து அவர்களைப் பாடசொல்லி  கேட்டு கொண்டிருந்தார் . மாலை மணி ஆறாகிவிட்டது . உதவியாளர் நிறைய துணி மூட்டைகளுடன் வந்தார் . எல்லாம் குழந்தைகளுக்கான சட்டை துணிகள் .

அவற்றை எல்லாம் எடுத்து ஒவ்வொரு  குழந்தைகளுக்கும் கொடுத்தார் பெரியவர் . பிள்ளைகள் மிகுந்த உற்சாகத்துடன் அதை அணிந்து கொண்டனர் . இதற்கிடையே  அந்த  பெரியவருடன்   வந்தவர்கள் தவிப்போடு காணப்பட்டனர்.

பக்கத்து ஊரு ஒன்றில் வழிபாடு செய்ய வேண்டியுள்ளது . உதவியாளர் மறுபடியும் பணிவோடு பெரியவரை அணுகி , "சீக்கிரம் புறப்பட்டால் நல்லது  பக்கத்து ஊரில் பூஜை இருக்கு" என்று இழுத்தார் .

பூஜையா  அதான்  இங்கேயே ஆகிவிட்டதே . இந்த ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் கொடுத்தோமோ அதுதான் பூஜை ! இது போதும்! .. என்று சொல்லி விட்டார் பெரியவர் .

Leave a Reply